" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் மற்றும் சானிடரி பொருட்கள் உரிய பில் இல்லாமல் விற்பனை செய்தாலோ அல்லது இது போன்ற பொருட்களை தட்டுப்பாடு காரணம் காட்டி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி எச்சரித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் அன்பு மெடிக்கலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். அப்போதும் அவகாசம் மற்றும் சானிடரி பொருட்கள் பில் இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.